இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இரண்டாவது அலை அதிக பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் கொரோனா தடுப்பூசியின் விலையை பாரத் பயோடெக் மற்றும் சீரம் நிறுவனம் ஆகியவை 400 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை விலை உயர்த்தியுள்ளனர். இதனால் மக்கள் மிகுந்த அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர்.