இந்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க மத்திய நிதியமைச்சகம் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சக அதிகாரிகள் கூறியபோது பெட்ரோல் டீசல் உள்பட எரிபொருள் மீதான வரியை எந்த அளவுக்கு குறைக்க முடியும் என அரசு ஆலோசித்து வருவதாகவும் இது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது