இன்னும் பிரசார களத்தில் இறங்காத மோடியை, திணறடிக்கும் வைகையில் பாஜவினர் பிரசார திட்டங்களை தீட்டி வருகின்றனர். ஆம், மேஜிக் கலைஞர்களை வைத்து பிரசாரம் மேற்கொள்ளவுள்ளனராம்.
குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளிலும் இந்த மேஜிக் கலைஞர்களை வைத்து தனது திட்டங்களை பிரசாரம் செய்யவுள்ளது குஜராத் பாஜக அரடு. மேஜிக் செய்வதோடு நிறுத்திக்கொளாமல், பாஜகவின் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்தும் வித்தியாசமாக முறையில் அறிவிக்கவுள்ளனராம்.
இன்று முதல் 182 தொகுதிகளிலும் இந்த மேஜிக் பிரசாரம் துவங்கவுள்ளது. தெரு நாடகம், நடனம், 3டி பிரசாரம் என பாஜகவினர் வித விதமான பிரசார யுக்திகளை கையாண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.