பேருந்துகளுக்கு அனுமதி …? மாநில அரசின் முடிவு என்ன?

சனி, 19 ஜூன் 2021 (16:59 IST)
இந்தியாவில் வேகமாக கொரொனா இரண்டாம் அலை பரவிவருகிறது.  அனைத்து மாநிலங்களிலும் இத்தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதால் மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில், கேரளா மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜய  தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

எனவே இங்கு, கொரொனா இரண்டாம் அலைப் பரவலைக் கட்டுப்படுத்துவம் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது தொற்றுக் குறைந்து வருவதால்  தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அதனால்,பேருந்துகளில் ஒற்றை எண், இரட்டை எண் பதிவு எண்களை அடிப்படையாக கொண்டு நேற்று (ஜூன்18 ) முதல் அனுமதி அளித்தது அம்மாநில அரசு. இந்த நடைமுறை ஒற்றைப்படை தேதிகளில் ஒற்றைப் பதிவெண் பேருந்துகளும், இரட்டைப் படை தேதிகளில் இரட்டைப்படை பதிவெண் கொண்ட பேருந்துகளும்,  இயக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் இன்றும் நாளையும் முழு  ஊரடங்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், தனியர் பேருந்து உரிமையாளர்களும் மாநில அரசுக்கு பல்வேரு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அதில், ஒற்றை, இரட்டைப்படை முறையை ரத்து செய்யப்பட வேண்டுமென கூறியுள்ள

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்