கிறிஸ்தவ வழிபாட்டு தலத்தில் குண்டு வெடிப்பு; ஒருவர் பலி, பலர் கவலைக்கிடம்!
ஞாயிறு, 29 அக்டோபர் 2023 (12:00 IST)
கேரளா மாநிலம் எர்ணாக்குளத்தில் கிறிஸ்தவ வழிபாட்டு தலத்தில் குண்டு வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள களமசேரி பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆதலால் கிறிஸ்தவ வழிபாட்டு கூடம் ஒன்றில் வழிபாட்டு கூட்டம் நடந்துள்ளது. அப்போது வழிபாட்டு தலத்தில் பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்தன.
இந்த குண்டு வெடிப்பில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரம் பேர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் 3 வெடிகுண்டுகள் வெடித்துள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் வெடித்தது எந்த வகையான குண்டு என்பது குறித்தும், குண்டு வைத்தது யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.