டி20 பார்முலாவா? டீ பார்முலாவா? பாஜகவின் துடுப்பு சீட்டு என்ன?

திங்கள், 17 செப்டம்பர் 2018 (09:06 IST)
கடந்த தேர்தலில் பாஜக தனது பிரச்சார யுக்திகளால் அபார வெற்றி பெற்றது. இதே போல் அடுத்து வரவிருக்கும் 2019 ஆம் ஆண்டு தேர்தலிலும் பிரச்சாரத்தை துடுப்பு சீட்டாக வைத்து வெற்றி பெற திட்டம் தீட்டி வருகின்றனர். 
 
அதன் படி, டி20 பார்முலா என்ற ஒன்று தேர்தலுக்காக முன்வைக்கப்பட்டுள்ளது. டி20 கிரிக்கெட் மக்களிடத்தில் எளிதாக சென்றடைந்தது போல் இந்த டி20 பார்முலா மூலம் மக்களை பாஜக எளிதாக நெருங்கும் என கூறப்படுகிறது. 
 
இந்த டி20 பார்முலாவின் படி, ஒவ்வொரு பாஜக தொண்டருக்கும் இலக்கு நிர்ணயிக்கப்படும். இலக்கின்படி ஒரு தொண்டர் குறைந்தபட்சம் 20 வீடுகளுக்குச் சென்று பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியின் திட்டங்கள், சாதனைகளை கூற வேண்டும். 
 
இவ்வாறு தொண்டர்கள் மக்களிடம் பேசும் போது கண்டிப்பாக ஒரு கோப்பை தேநீர் அளித்து அவர்களுடன் உரையாட வேண்டுமாம். இதை தவிர்த்து ஹர் பூத் தஸ் யூத் என்ற திட்டமும், நமோ ஆப்ஸ் செயல் திட்டமும் தேர்தல் பிரச்சாரத்துக்காக செயல்படுத்தப்பட உள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்