3 குழந்தைகள் இருப்பதை மறைத்த மேயர் தகுதி நீக்கம்.. பரபரப்பு தகவல்..!
சனி, 29 ஜூலை 2023 (09:15 IST)
தனக்கு மூன்று குழந்தைகள் இருப்பதை மறைத்து மேயர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெண் ஒருவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இரண்டு குழந்தைகளுக்கு மேல் வைத்திருப்பவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கூடாது என பிகாரில் சட்டம் உள்ளது. ஆனால் இந்த சட்டத்தை மீறி மூன்று குழந்தைகள் இருப்பதை மறைத்து ராக்கி குப்தா என்பவர் பீகார் மாநில சப்ரா நகர் மேயராக சமீபத்தில் பதவி ஏற்றார்.
இந்த நிலையில் பதவி ஏற்ற பின்னர் அவருக்கு மூன்று குழந்தைகள் இருப்பது தெரியவந்ததை அடுத்து அப்ப பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை அடுத்து புதிய மேயர் இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
பதவி ஏற்ற ஒரு சில நாட்களிலேயே உண்மையை மறைப்பதற்காக மேயர் பதவி நீக்கம் செய்யப்பட்டது சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது