செப்டம்பர் 26. 27 வெள்ளி, சனி ஆகிய இருதினங்களில் வங்கிகள் இணைப்பை எதிர்த்து வங்கி அதிகாரிகளின் சங்கங்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தை அறிவித்துள்ளன. அதனையடுத்து 28,29 சனி ஞாயிறு என்பதால் நான்கு நாட்கள் வங்கிப்பணிகள் மற்றும் ஏடிஎம்கள் முடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
நாடு முழுவதும் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வங்கி அதிகாரிகள், இந்தப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும், இந்த வேலைநிறுத்தம் மக்களை துன்புறுத்தும் நோக்கத்தில் நடத்தப்படவில்லை என்றும் இந்த போராட்டம் நடத்தும் சூழலை மத்திய அரசு தான் ஏற்படுத்தி உள்ளதாகவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது