இந்த நிலையில், நேற்று அவுரங்கசீப் கல்லறையை அகற்ற கோரி நடைபெற்ற போராட்டத்தில் திடீரென மோதல் வெடித்ததால், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மன்னர் அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட காரணமாக, அந்த பகுதியில் பதற்றமான நிலை நீடித்து வருவதாக கூறப்படுகிறது. வன்முறை மேலும் பரவாமல் தடுக்க, நாக்பூர் நகரம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, "அவுரங்கசீப் கல்லறையை அரசு அகற்றாவிட்டால், பாபர் மசூதியை போல கரசேவை செய்து, கல்லறையை வேரோடு பிடுங்கிவோம்" என பஜ்ரங் தள் அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.