வாஜ்பாய் கவலைக்கிடம்; பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்த கெஜ்ரிவால்

வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (15:21 IST)
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருப்பதால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்துள்ளார்.

 
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக் குறைவாக காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதால் பல்வேறு தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்து வருகின்றனர்.
 
பாஜக அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாயின் உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும் அரவிந்த கெஜ்ரிவால் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்துள்ளார்.
 
இதுகுறித்து கெஜ்ரிவாலின் ஊடக ஆலோசகர் கூறியதாவது:-
 
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை மோசமடைந்துள்ள இந்த சூழலில் தனது பிறந்தநாளை தொண்டர்கள் யாரும் கொண்டாட வேண்டாம் என முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். தனக்கு பிறந்தநாள் கூறுவதற்கு வீட்டிற்கு வருவதையும் தவிர்க்க வேண்டும் என்று தொண்டர்களை கேட்டுக்கொண்டார் என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்