இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி எப்போது நடந்தாலும் அந்த போட்டியை இந்திய ரசிகர்களும் சரி, பாகிஸ்தான் ரசிகர்களும் சரி ஒரு போட்டியாக பார்ப்பதற்கு பதில் போராகத்தான் பார்த்து வருகின்றனர். வெற்றி பெறும் அணியை அந்நாடே கொண்டாடும் என்பதும் தோல்வி அடையும் அணிக்கு கடும் கண்டனங்கள் எழும் என்பதும் வரலாறு
இந்த நிலையில் இந்த வெற்றி குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா குறிப்பிடும்போது, 'பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதலில் வெற்றி கிடைத்துள்ளதாகவும், இந்த வெற்றிக்காக சிறப்பாக விளையாடிய இந்திய அணிக்கு தனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த சிறப்பான வெற்றியை ஒவ்வொரு இந்தியரும் பெருமையுடன் கொண்டாடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.