முன்னாள் ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவை அதிகாரிகள் ’சிறப்பு சலுகைகள் தர முடியாது மக்களோடு மக்களாக பஸ்சில் செல்லுங்கள்’ என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் விமான நிலைய அதிகாரிகள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. முறையாக சோதனை செய்துதான் அனுப்புவோம் என சோதனை சாவடி பக்கமாக அவரை கொண்டு வந்து சோதனை செய்து அனுப்பினர். சோதனை சாவடியில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று சோதனை முடிந்துதான் உள்ளே அனுமதிகப்பட்டார். விமானத்துக்கு செல்ல அவர் விஐபிக்கள் பஸ்சில் செல்ல அனுமதி கேட்டார். அதற்கும் மறுப்பு தெரிவித்த அதிகாரிகள் சாதரண மக்கள் போகிற பஸ்ஸில் தான் நீங்களும் போக வேண்டும் என சொல்லிவிட்டார்கள்.
இசட் பிரிவு பாதுகாப்பு பெற்ற ஒரு கட்சி தலைவருக்கு எந்த வித சலுகைகளும் அளிக்காததை தெலுங்கு தேசம் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒரு காலத்தில் முதல்வராக நாடு முழுவதும் சுற்றி வந்த மனிதன் இப்போது சொந்த மண்ணிலேயே அவமானப்படுத்தப்பட்டிருப்பது அவரது தொண்டர்களுக்கு மிகப்பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.