ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்தாலும் இனி ஜிஎஸ்டி: அதிரடி அறிவிப்பால் பயணிகள் அதிர்ச்சி!

புதன், 31 ஆகஸ்ட் 2022 (11:14 IST)
ரயில் டிக்கெட்டை புக் செய்யும்போது மட்டுமின்றி அந்த டிக்கெட்டை கேன்சல் செய்தால் கூட இனி ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
ஆன்லைன் மூலம் ரயில்வே டிக்கெட் புக் செய்யும் போது, புக் செய்யப்படும் தொகைக்கு ஏற்ப ஜிஎஸ்டி வசூல் செய்யப்படும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் முன்பதிவு செய்யப்பட்ட நிலையில் டிக்கெட்டை ரத்து செய்வதற்கும் இனி ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஏசி ரயில் பெட்டிகள் மட்டுமே இந்த ஜிஎஸ்டி அறிவிப்பு என்பது குறிப்பிடத்தக்கது
 
ரயிலில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை கேன்சல் செய்ய கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவது தெரிந்ததே. இனி அந்த கட்டணத்துடன் ஜிஎஸ்டியும் சேர்த்து வசூலிக்கப்படும் என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆனால் ஏசி தவிர பொது பெட்டிகளுக்கு ஜிஎஸ்டி இல்லை என்பது பொதுமக்களுக்கு ஆறுதலான ஒரு தகவலாகும்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்