2002-2007-ம் ஆண்டு இந்திய ஜனாதிபதியாக அப்துல் கலாம் பதவி வகித்தார், அவரை தொடர்ந்து 2007-2012-ம் ஆண்டு வரை, பிரதீபா பட்டீல் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், 2012-ம் ஆண்டு பிரதீபா பட்டீலுக்கு பிறகு அடுத்த ஜனாதிபதியாக அப்துல் கலாம் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று திரினாமூல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்தார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற மம்தா பானர்ஜியின் உணர்ச்சிகர கோரிக்கையை கலாம் தீவிரமாக பரிசீலினை செய்தார். ஆனால் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதியாக்க முடிவு செய்ததது. ஒருவேளை மம்தாவின் கோரிக்கையை ஏற்று தேர்தலில் போட்டியிட முடிவு செய்தால், தனது முடிவு குறித்து மக்களுக்கு விளக்க ஒரு கடிதமும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் அந்த முடிவை பற்றி தெரிவிக்க ஒரு கடிதத்தையும் கலாம் எழுதி வைத்திருந்தார்.