சமூக வலைதளங்களான பேஸ்புக், டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை முழுமையாக தற்போது டிக் டாக் வீடியோக்கள் ஆக்கரமிக்க ஆரம்பித்துள்ளன. அவற்றில் திறமையை வெளிக்காட்டும் வீடியோ என்பது மிகவும் குறைவானதே.
ஆனாலும் டெல்லியை சேர்ந்த சல்மான்(19) என்ற வாலிபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து படத்தில் வரும் துப்பாக்கி சுடுதல் காட்சியை போலவே காட்சியை நடித்து அதனை வீடியோவாக எடுத்து டிக் டாக்கில் பதிவேற்றம் செய்ய முடிவு செய்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சல்மான் கன்னத்தில் துப்பாக்கிகுண்டு பாய்ந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சல்மான் சம்பவ இடத்திலேயே பலியானார். டிக் டாக்கால் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.