உத்தரப்பிரதேச மாநிலத்தில் 6 வயது சிறுமியை 50 வயது அரசு ஊழியர் கஜேந்திர சிங் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சம்பவத்தன்று கஜேந்திர சிங் மது போதையில் இருந்ததாகவும், போதையின் காரணமாக 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அதன் பின்னர் வெறி அடங்காததால் அருகில் கட்டப்பட்டிருந்த ஆட்டையும் வன்புணர்வு செய்ததாகவும் தெரிகிறது.
சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு, இயற்கைக்கு மாறான விலங்குகளுடன் பாலியல் உறவு செய்த வழக்கு ஆகியவை அரசு ஊழியரான கஜேந்திர சிங் மீது பதிவு செய்திருப்பதாகவும், இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.