இந்நிலையில் தேர்தலை ஒட்டி தாக்கல் செய்த வேட்புமனுவில் வினேஷின் சொத்து மதிப்பு தோராயமாக ரூ.3 கோடி என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆண்டு வருமானம் ரூ. 13 லட்சம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், வால்வோ (Volvo) XC 60 ரக கார், 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஹூண்டாய் க்ரெட்டா கார், 17 லட்சம் மதிப்புள்ள டொயோட்டா இன்னோவா என மூன்று கார்கள் வைத்துள்ளார்.
இதில் இன்னோவா கார் கடனில் ரூ.13.61 லட்சத்தை மாத தவணையாக திருப்பிச் செலுத்தி வருகிறார். அவரது அசையும் சொத்து மதிப்பு ரூ.1.10 கோடி என்றும், சோனிபட்டில் உள்ள வீடு உட்பட ரூ.1.85 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை வைத்துள்ளார். இது தவிர, போகாட் ஆக்சிஸ், எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளில் கணக்கு வைத்துள்ள்ளார்.
அதில் மொத்தமாக சுமார் ரூ.40 லட்சம் இருப்பில் உள்ளது. 1.50 லட்சம் மதிப்பிலான பிரீமியத்துடன் கூடிய இன்சூரன்ஸ் வைத்துள்ளார். தன்னிடம் ரூ.1,95,000 ரொக்கப் பணம் இருப்பதாக வினேஷ் போகத் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.