இந்நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை வைத்து உத்திரப்பிரதேச மாநிலம் நந்தகிராமில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் அப்பகுதியில் உள்ள கவுன்சிலர் அலுவலக்த்தில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட பத்து பேரை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து லட்சக்கணக்கான ரொக்கம், ஒரு லேப்டாப் மற்றும் ஒரு நாட்டு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.