கள்ளச்சாராய உயிரிழப்பு 40ஆக உயர்வு: பீகாரில் பரபரப்பு!

சனி, 6 நவம்பர் 2021 (21:34 IST)
பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பீகார் மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக மது விலக்கு அமலில் உள்ளது என்பதும் இதன் காரணமாக மாநிலத்தில் கள்ளச்சாராயம் அதிக அளவில் விற்பனையாகி வந்தது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது 
 
இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் கடந்த 3 நாட்களில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது
 
மேலும் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் அரசு மீது எதிர்க்கட்சியான ஆர்ஜேடி கட்சியை கடும் விமர்சனம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த வேண்டிய பீகார் அரசு வேடிக்கை பார்த்து வருவதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்