ஆம், ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்ற நிலையில் நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த தடுப்பூசியை டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து இந்த மருந்து தயாரிப்பு பணிகள் அடுத்த 3 வாரத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது. ஸ்புட்னிக் மருந்து கொரோனா பாதிப்பை 90 சதவீதம் குணப்படுத்தும் திறன் கொண்டது என மருந்து தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் படி ரஷ்யாவில் இருந்து சுமார் 10 கோடி ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இந்தியாவுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.