முதல் பாதியில் இயக்குநர் ‘ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரோம்’ குறித்து விளக்க முயற்சித்து தோல்வி அடைந்துள்ளார். நாயகன் பீச்சாங்கையால் பிளேடு போட்டு பிக்பாக்கெட் அடிப்பதில் விளையாடுகிறது. நாயகன் பிக்பாக்கெட் அடித்தாலும் அவருக்கென்று ஒரு தொழில் தர்மம் வைத்து விளையாடி வருகிறார். பர்ஸில் பணத்தை தவிர வேறு எது இருந்தாலும் அதை உரியவருக்கே அனுப்பி வைக்கிறார்.
முதல் பாதியை இரண்டாம் பாதியில் சரிசெய்ய முயற்சித்து இருக்கிறார் இயக்குநர். நாயகன் திருந்த நினைக்கும் போது நாயகனின் ‘பீச்சாங்கை’ சொல்பேச்சு கேட்காமல் போகிறது. அதனால் ஏற்படும் விளைவுகள்தான் மீதம் கதை. படத்தில் காதல் காட்சிகள் அழுத்தமாக இல்லை. பாடல்கள் படத்தோடு ஒன்றிணையவில்லை. படத்தில் பெரும்பாலும் புது முகங்கள்தான். நாயகன் கதைக்கு ஏற்ப ஒத்து நடித்துள்ளார்.