கார்த்தியின் ‘விருமன்’ படம் எப்படி? டுவிட்டர் பயனாளிகளின் விமர்சனம்!

வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (10:27 IST)
கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘விருமன்’ . 
 
இன்று ‘விருமன்’  திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில் இன்று முதல் காட்சி பார்த்தவர்கள் டுவிட்டரில் விமர்சனங்களை பதிவு செய்துவருகின்றனர்
 
முத்தையாவின் பாணியில் உள்ள மற்றுமொரு கிராமிய படம் எதிர்பார்த்த அளவு இல்லை என்றும் அடுத்தது என்ன காட்சி வரும் என்பதை யூகிக்கும் வகையில் இருப்பதாகவும் சிலர் கருத்து தெரிவித்தனர் 
 
ஒரு சிலர் படம் செம ஜாலியாக இருப்பதாகவும் கார்த்தி மற்றும் அதிதிஷங்கர் நடிப்பும், யுவன் ஷங்கர் ராஜா இசை ஆகியவை சூப்பராக இருக்கும் தெரிவித்துள்ளனர் 
 
கார்த்தியின் நகைச்சுவை மற்றும் ஆக்சன் காட்சிகள் சூப்பராக இருப்பதாகவும் அதிதிஷங்கர் ஒரு புதுமுகம் போலவே தெரியவில்லை என்றும் அட்டகாசமான நடிகை என்றும் தெரிவித்துள்ளனர் 
 
யுவன்சங்கர் ராஜாவின் இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம் என்றும் கூறப்படுகிறது மொத்தத்தில் முத்தையாவின் வழக்கமான படங்களில் ஒன்றாக தான் ‘விருமன்’ படம் இருக்கும் என்பது டிவிட்டர் பயனாளிகளின் விமர்சனங்களில் இருந்து தெரியவருகிறது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்