பெண்களுக்கும், ஆண்களுக்கும் பொதுவான பிரச்சினைதான் இந்த மருக்கள். பொதுவாக கழுத்துப் பகுதிகளில் அதிகம் காணப்படும் மருக்கள், முகத்திலும் வருவதுண்டு.
இவற்றை தற்போது அழகு நிலையங்களில் நீக்கும் முறை உள்ளது.
இதுபற்றி நமது அழகுக் கலை நிபுணர் மஞ்சு மாதா கூறுகையில், மருக்களை நீக்க சில முறைகள் உள்ளன. அதாவது சிறியதாக இருந்தால் அவற்றை த்ரெட்டிங் முறையிலேயே நீக்கி விடலாம். அதாவது புருவத்தை சீராக்கும் த்ரெட்டிங் முறையிலேயே மருவையும் நீக்கிவிட்டு அங்கு ஆண்டிசெப்டிக் மருந்து ஒன்றை தடவிவிட வேண்டும்.
அல்லது மருவின் அளவு பெரிதாக இருந்தால் அதனை நீக்குவதற்கு என்று வார்ட்ஸ் ரிமூவிங் மெஷின் உள்ளது. அதனைக் கொண்டு மருக்களை நீக்கலாம். அதில் பயன்படுத்தப்படும் ஊசி புதிதா அல்லது நன்கு சுத்தம் செய்யப்பட்டதா என்பதை அறிந்து கொள்வது நல்லது.
மேலும், கழுத்தில் இருக்கும் மருக்களை நீக்கிய பிறகு சின்தடிக் துப்பட்டாக்களைப் பயன்படுத்தக் கூடாது. மருக்களை நீக்கிய ஒரு வாரத்திற்கு சின்தடிக் துப்பட்டாக்கள், கழுத்து ஒட்டிய சின்தடிக் சுடிதார் அணியக் கூடாது. ஒரு வாரத்திற்கு சூரிய வெளிச்சத்தில் அதாவது வெயிலில் செல்லக் கூடாது.