மார்கண்ட எலும்பு சூப்
குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் மார்கண்ட எலும்பு சூப் செய்து கொடுக்கலாம். உடலுக்கு மிகவும் உகந்தது.
தேவையான பொருட்கள்
மார்கண்ட எலும்பு - 100 கிராம்
கேரட் - 2
உருளைக் கிழங்கு - 1
பீன்ஸ் - 4
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 4 பள்ளு
உப்பு
சோம்பு
எண்ணெய் - தாளிக்க
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை சிட்டிகை
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
செய் முறை
மார்கண்ட எலும்பை நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து நன்கு காய்ந்ததும் எண்ணெய் விட்டு சோம்பு போட்டு தாளிக்கவும்.
வெங்காயம், உருளைக் கிழங்கு, கேரட், பீன்ஸ் ஆகியவற்றை நன்கு வதக்கவும்.
பின்னர் எலும்பைப் போட்டு வதக்கவும். பின்னர் தக்காளியைச் சேர்க்கவும்.
இஞ்சியையும், பூண்டையும் தோல் நீக்கி விழுதாக அரைத்து அதையும் சேர்த்து வதக்கவும்.
பின்னர் சரியான அளவில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.
பின்னர் சரியாக ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடிவிடவும்.
குக்கரில் 6 அல்லது 7 விசில் விட்டு இறக்கிவிடவும்.
குழந்தைகளுக்கு ஏற்ற மார்க்கண்ட எலும்பு சூப் தயார். வெறும் எலும்பு ருசியை விரும்பாத குழந்தைகள், கேரட், உருளைக்கிழக்கு ருசியை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதனை இட்லி, தோசையுடனும், சாதத்தில் பிசைந்தும் கொடுக்கலாம்.
இதுபோன்ற உணவு முறைகள் உங்களுக்கு தெரிந்தால் எங்களுக்கு அனுப்புங்கள். உங்கள் பெயருடன் வெளியிடப்படும்.