சமையலறையை சுகாதாரமா‌க்க

செவ்வாய், 30 ஜூன் 2009 (12:09 IST)
சமையலறை‌யி‌ன் தரைப் பகுதியை ‌ஒரு நா‌ள் ‌வி‌ட்டு ஒரு நா‌ள் கிருமி நாசினி கலந்த நீரால் சுத்தம் செய்ய வேண்டும்.

சு‌த்த‌ம் செ‌ய்தது‌ம் தரைப்பகுதி ஈரமாக இருக்கும் போது நடக்கக் கூடாது. உல‌ர்‌ந்த து‌ணியை‌க் கொ‌ண்டு துடை‌க்க வே‌ண்டு‌ம். நன்கு உலர்ந்த பின்னரே நடக்க வேண்டும்.

ந‌ல்ல தரமான ‌கிரு‌மி நா‌சி‌னியை‌ப் பய‌‌ன்படு‌த்த வே‌ண்டு‌ம். அ‌ப்போது தான் பலனிருக்கும்.

அடுத்தது, சமையலறையில் சூடான‌ப் பா‌த்‌திர‌ங்களை தூ‌க்க‌ப் பய‌ன்படு‌த்து‌ம் துணியை தினமும் துவைக்க வேண்டும். ஒ‌ன்று‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட து‌ணிகளை வை‌த்து‌க் கொ‌ண்டு மா‌ற்‌றி மா‌ற்‌றி துவை‌த்து ஒ‌வ்வொ‌ன்றாக‌ப் பய‌ன்படு‌த்து‌ங்க‌ள்.

அதனையு‌ம் ‌ந‌ல்ல தரமான சோ‌ப் கொ‌ண்டு துவை‌த்து வெ‌யி‌லி‌ல் காய‌ப் போடு‌ங்க‌ள். அது நன்கு உலர்ந்த பின்னரே, அதை மீண்டும் பயன்படுத்த வேண்டும். எ‌க்காரண‌ம் கொ‌ண்டு‌ம் ஈர‌த்தோடு பய‌ன்படு‌த்தா‌தீ‌ர்க‌ள்.

வெப்துனியாவைப் படிக்கவும்