கை, கால்களில் விளக்கெண்ணெய் தடவினால் வெடிப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம். இதை புருவத்திலும், கண் இமையில் உள்ள முடியிலும் தினமும் படுப்பதற்கு முன் தடவி வந்தால் முடி அடர்த்தியாகும். இது புருவத்தில் முடியே இல்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல தீர்வு தரும்.
தேங்காய் எண்ணெயை முடியில் தடவுவது பல காலமாக இருந்து வரும் பழக்கம். இதனால் உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுகிறது. இதை வாரம் ஒருமுறை உடலில் நன்றாகத் தேய்த்து, அதன் பின் குளித்தால் பட்டுப் போன்ற மென்மை தரும்.
தேங்காய் எண்ணெயை இளம்சூடாக காய்ச்சி அதனை லேசாக மசாஜ் செய்து தலையில் தடவி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சிக் கிட்டும். தலை முடியும் அடர்த்தியாக வளரும்.
தலையில் அதிகமாக பொடுகு மற்றும் பேன் இருப்பவர்கள் இரவில் வேப்ப எண்ணெயைத் தடவி காலையில் தலைக்குக் குளித்தால் நல்லது. ஆனால் படுக்கும் போது தலையில் ஏதாவது ஒரு பழைய துணியைக் கட்டிக் கொண்டு படுக்க வேண்டும் இல்லையெனில் தலையணை நாற்றமடித்துவிடும்.