முக‌த்‌தி‌ற்கான கு‌றி‌ப்புக‌ள்

புதன், 17 ஜூன் 2009 (15:38 IST)
நவதானிய மாவு மற்றும் பாலேடு ஆகியவற்றை ஒரே விகிதத்தில் கலந்து ‌விழுது ஒன்றை தயாரித்து முகத்தில் பூசி, அது காய்ந்த பிறகு முகத்தை அலம்பினால் முகம் பிரகாசமாக இருக்கும்.

முக‌ப்பரு வராம‌லிரு‌க்க முக‌த்தை வேப்ப எண்ணெயால் மசாஜ் செய்யலா‌ம். வேப்பந்துகள்களை நீரில் கலந்து அந்த நீரில் குளிக்கலா‌ம். வேப்பிலைத்தூள் அரைத் தேக்கரண்டி மற்றும் முல்தானி மிட்டி 2 தேக்கரண்டிகளை எடுத்து கலக்கி பேஸ்ட் தயார் செய்து முகத்தில் அதை தடவி வரலா‌ம். ந‌ல்ல பல‌ன் ‌கி‌ட்டு‌ம்.

வெள்ளரிப் பிஞ்சுகளை துண்டாக்கி சில துண்டுகளை நெற்றி, கன்னங்கள் ஆகிய இடங்களில் சிறிது நேரம் வையுங்கள். இ‌வ்வாறு செ‌ய்தா‌ல் சரும‌த்‌தி‌ற்கு கு‌ளி‌ர்‌ந்த த‌ன்மை ‌கி‌ட்டு‌ம். சரும‌ம் ‌மி‌ளிரு‌ம்.

குளிப்பதற்கு முன்பு மஞ்சள் பொடியையும் நல்லெண்ணையையும் கலந்து முகத்தில் தடவி 5 நிமிடம் காயவிடவும். அதன்பிறகு வெதுவெதுப்பான தண்ணீரால் முகத்தை கழுவவும். முகம் பளபளக்கும்.

ஆரஞ்சு பழ‌ச் சாறு உடலு‌க்கு ம‌ட்டும‌ல்ல முக‌த்‌தி‌ற்கு‌ம் ஏ‌ற்றது. பழ‌ச்சாறை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாக பொலிவுடன் தோன்றும்.

வெப்துனியாவைப் படிக்கவும்