ஆடை‌க்கே‌ற்ற அழகான கால‌ணிக‌ள்

சனி, 3 மே 2008 (15:27 IST)
ஏதேஒரசெரு‌ப்பவா‌ங்‌கினோமா... அதவரு‌ட‌ங்க‌ளபோ‌ட்டு ‌கி‌ழி‌த்து ‌பி‌ன்ன‌ரபுதசெரு‌ப்பவா‌ங்செ‌ன்கடை‌யி‌ல், ‌கி‌‌ழி‌ந்செரு‌ப்பை‌ககா‌ட்டி இதசெரு‌ப்பு ‌நீ‌ங்க‌ளவா‌ங்‌கிய ‌அதவிலை‌யிலேயஇ‌ப்போது‌மவே‌ண்டு‌மஎ‌ன்றபேர‌மபே‌சி வா‌ங்‌கி நட‌ந்தபா‌ர்‌த்து ‌‌திரு‌ப்‌தி அடை‌ந்கால‌மஎ‌ல்லா‌மமலஏ‌றி‌பபோ‌ய்‌வி‌ட்டது.

த‌ங்களதஆடைகளு‌க்கு‌ம், செ‌‌ன்றவரு‌மஇட‌ங்களு‌க்கு‌மஏ‌ற்வகவகையாசெரு‌ப்புகளதே‌ர்‌ந்தெடு‌த்தஅ‌ணி‌ந்தகொ‌ள்ளு‌மநாக‌‌ரீக‌ககால‌மஇது.

ஆடையின் நிறத்திற்கேற்ற செருப்பு, அதிக உயரம் கொண்ட குதிக்கால் செருப்பு, கால்களை முழுவதும் மூடிக் கொள்ளும் கட் ஷ¤, மெல்லிய லேஸ்களைக் கொண்ட தளர்வான செருப்பு, பெரிய கற்கள் பதித்தவை, துணியால் அலங்கரிக்கப்பட்ட காலணிகள் என பலப் பல வகைகளில் காலணிகள் சந்தைகளில் குவிகின்றன.

webdunia photoWD
ஒவ்வொன்றும் தரத்திற்கும், அழகுக்கும் ஏற்ற விலைகளில் கிடைக்கின்றன. குறைந்த விலையிலும் அழகான காலணிகளை வாங்கிச் செல்ல முடியும்.

பாதங்களின் அழகைக் கூட்டும் விதத்திலும் காலணிகள் கிடைக்கின்றன.

இதிலும் மணப் பெண்களுக்கு என்று சில காலணிகள் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகின்றன. 2000 ரூபாயில் இருந்து துவங்கும் இதன் விலைகள் எந்த இடத்திலும் நிற்பதில்லை.

அதாவது திருமண ஆடையின் நிறத்தில், அதில் உள்ள வடிவமைப்புக்கு ஏற்ற வகையிலும், மணப்பெண் அணியும் நகைக்கு ஏற்ற வகையிலும் காலணிகள் தயாரிக்கப்படுகின்றன.

விருந்து நிகழ்ச்சி, திருமண நிகழ்ச்சிக்கு செல்வதென்றால் ஆடம்பரமான காலணிகளை அணிந்து கொண்டு அனைவரையும் அசத்தலாம்.

ஆனால் தினமும் அலுவலகத்திற்கு அணிந்து செல்வதற்கு இவை எல்லாம் சரிபட்டு வராது. மிகவும் நலினமாக, ஆனால் பார்ப்பதற்கே கொஞ்சம் விலை கூடுதல் போல என்று நினைக்க வைக்கும் வகையில் காலணிகள் வந்துள்ளன.

சாதாரண தோற்றத்தில் நல்ல தரத்துடன் அணிவதற்கு சுகமானதாகவும் அலுவலக பயன்பாட்டிற்கு பல வகைகளில் காலணிகள் இடம்பிடித்துள்ளன.

webdunia photoWD
காலணிகள் என்றதும் குழந்தைகளுக்குச் சொல்லவா வேண்டும். விளக்கொளியில் மின்னும் செருப்பு, ஒலி எழுப்பும் செருப்பு, சிறுவர்களுக்குப் பிடித்த பொம்மைகளை இணைத்திருக்கும் வகை, பெண் குழந்தைகளுக்குப் பிடித்த வண்ண வண்ண மணிகளைக் கொண்டவை, புசுபுசுவென தோற்றமளிக்கும் செருப்புகள் என ஏராளம் ஏராளம்.

இதிலும் விளையாட்டு வீரர்கள் அணிந்திருப்பதைப் போன்ற தோற்றத்துடன் ஆண் குழந்தைகளுக்கு என பல்வேறு விதங்களில் செருப்புகள் வந்துள்ளன.

சந்தையில் பல வகைகளில் காலணிகள் வந்தாலும் நமக்கென்று ஒரு தேர்வு உள்ளது.

உங்களுக்குப் பிடித்தவற்றை தேர்வு செய்து அணியுங்கள். காலுக்கும், காசுக்கும் எந்த பாதிப்பும் இல்லாத வகையில் உங்களது தேர்வு இருக்கட்டும்.