சர்வதாரி ஆண்டு‌‌ப் பலன்கள் : மேஷம்!

முன் வைத்த காலைப் பின்வைக்காமல் முன்னேறும் குணமுடைய நீங்கள் திடீரென்று முடிவெடுத்து எதிரிகளை திக்குமுக்காடச் செய்துவிடுவீர்கள். தனிமையை நேசிப்பவர்கள். உங்களின் பாக்யாதிபதியான குரு பகவான் ஆட்சி பெற்று அமர்ந்து உங்கள் ராசியை பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த சர்வதராரி வருடம் பிறப்பதால் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர்கள். பேச்சால் வீண் வாக்குவாதங்கள் வந்துபோதன்தே! அந்த நிலையெல்லாம் மாறும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். குடும்ப வருமானம் உயரும். மனைவி வழி உறவினர்களால் இருந்துவந்த மன உளைச்சல் விலகும்.

ராசிக்கு 4ஆம் வீட்டில் நிற்கும் கேதுவும், 10-ம் வீட்டில் அமர்ந்திருக்கும் ராகுவும் உங்களின் நட்பு வட்டத்தை பெரிதாக்குவதுடன் வி.ஐ.பி.க்களின் தொடர்பையும் ஏற்படுத்தித் தருவதாக அமையும். ராசிக்கு 5இல் சனி நிற்பதால் பிள்ளைகளால் மன உளைச்சல், விண் அலைச்சல் வரக்கூடும். குருவின் பலத்தால் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றிப் பெறுவீர்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். உங்கள் ராசிக்கு சுக வீடான 4ஆம் வீட்டில் சந்திரன் ஆட்சிப் பெற்றிருக்கும் போது இந்த புத்தாண்டு பிறப்பதால் புது சொத்துகள் வாங்குவீர்கள்.

1.5.2008 முதல் 11.8.2008 முடிய உள்ள காலகட்டத்தில் உங்கள் ராசிநாதனான செவ்வாய் வலுவிழப்பதால் சிறு சிறு விபத்துகள், மாதவிடாய்க் கோளாறு வந்து நீங்கும். கர்ப்பினி பெண்கள் கொஞ்சம் கவனமாக இருக்கப் பாருங்கள். ஆனி, ஆவணி மாதங்களில் புதிய முயற்சிகள் வெற்றிபெரும். சொந்த பந்தங்கள் மெச்சும்படி உங்கள் பிள்ளையின் திருமணத்தை முடிப்பீர்கள். வேலையும் கிடைக்கும். பழைய கடனை அடைப்பீர்கள். கன்னிப் பெண்களுக்கு கல்யாணம் கூடி வரும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

17.10.08 முதல் 17.12.08 முடிய உள்ள காலகட்டங்களில் செவ்வாய் பகைக்கோள் பார்வை மற்றும் மறைவதாலும் 6. 12. 08 முதல் குரு 10-வது வீட்டிற்குச் செல்வதாலும் அக்காலகட்டத்தில் உறவினர் பகை, வீண் பழி, தாய்வழி உறவினர்களுடன் மோதல் வந்து நீங்கும். அரசியல்வாதிகள் சிந்தித்து செயல்படுவார்கள். தலைமையின் அன்புக்கு பாத்திரமாவார்கள். புரட்டாசி மாதத்தில் குழந்தை இல்லையே என வருந்திக் கொண்டிருந்த தம்பதியர்களுக்கு அழகான வாரிசு உருவாகும். மாணவ-மாணவிகளுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். கார்த்திகை, மார்கழி மாதங்களில் வியாபாரம் சூடுபிடிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்களைப் பற்றி குறை கூறியவர்களுக்கு இனி பதிலடி கொடுப்பீர்கள். ஆனால் 6.12.08 முதல் குரு பத்தாவது வீட்டிற்கு வருவதால் அதிகாரிகளை அனுசரித்துப் போவது நல்லது. கணினி துறையினர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைத்துறையினர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும்.

பரிகாரம் :

சென்னை-பாரீசில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் கந்தக் கோட்டம்-ஸ்ரீமுருகப் பெருமானை புனர்பூசம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். சஷ்டி திதியில் விரதம் இருங்கள். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுங்கள். வெற்றி கிட்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்