வாழ்க்கையின் உச்சகட்டத்தை எட்டிய பிறகும் கூட விழுந்துக் கிடந்ததை மறக்காத குணமுடையவர்கள். நம்பி வந்தவர்களை கைவிடாது நேசக்கரம் நீட்டுபவர்கள். கடலளவு அன்புக்கொண்டவர்களான நீங்கள், எங்கும் எதிலும் முதலிடம் பிடிக்க அதிரடியாக செயல்படக்கூடியவர்கள் .
உங்களின் 3-வது ராசியில் இந்த தமிழ் புத்தாண்டு பிறப்பதால் மனப்போராட்டங்களிலிருந்து விடுபடுவீர்கள். தோற்றப்பொலிவு கூடும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். உங்கள் ராசிநாதனான சுக்ரன் உச்சம் பெற்று, லாப வீட்டில் பலமாக நிற்கும் போது பிறப்பதால் கணவன் -மனைவிக்குள் இருந்துவந்த கருத்து மோதல்கள் நீங்கும். தடைபட்ட காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். இப்போது 8-ல் மறைந்திருக்கும் குரு 6. 12. 2008 முதல் 9-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்க்க இருப்பதால் கடனாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் போக்கை எண்ணி வருந்தினீர்களே! இனி அந்த கவலை நீங்கும். மகளின் திருமணத்தை கோலாகளமாக நடத்தி முடிப்பீர்கள். வீட்டிற்குத் தேவையான சாதனங்களை வாங்குவீர்கள்.
ராசிக்கு 3-ம் இடத்தில் கேது இருக்கும் போது இந்த ஆண்டு பிறப்பதால் தாம்பத்யம் இனிக்கும். உடன்பிறந்தோரின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள். நீண்ட நாள் கனவான சொந்த வீடு அமையும். ஆவணி மாதத்தில் புது வீட்டில் குடி புகுவீர்கள். அயல்நாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்களின் சந்திப்பு நிகழும். கன்னிப் பெண்களுக்கு தடுமாற்றம் நீங்கும். தாயாரின் ஆதரவு பெருகும். 6. 5. 08 முதல் 14. 8. 08 வரை மற்றும் அக்டோபர் மாதம் வரையிலான காலக்கட்டங்களில் வீண் சந்தேகம், முன்கோபம், வயிற்றுவலி, மூட்டுவலி வந்து நீங்கும். சித்திரை மாதத்தில் உங்களின் வருமானம் உயரும். மகனின் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும்.
6. 12. 08 முதல் குரு 9-வது வீட்டிற்கு வருவதால் அரசு காரியங்கள் சாதகமாக முடியும். அரசியல்வாதிகள் பரபரப்புடன் காணப்படுவார்கள். மாணவ-மாணவியர்கள் ஆசிரியர்களின் அன்பை பெறுவார்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லைகள் நீங்கும். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். தை, பங்குனி மாதங்களில் புது ஒப்பந்தகள் கையெழுத்தாகும். கடையை மாற்றி விரிவுப்படுத்தவீர்கள். அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். மார்கழி மாதத்தில் சேமிப்புகள் கரையக்கூடும். வாகனத்தை இயக்கும் போது கவனத்தை சிதறவிடாதீர்கள். உத்யோகத்தில் வேலைச் சுமை அதிகரித்தாலும் மேலதிகாரியின் நம்பிக்கையை பெறுவீர்கள். பதவி உயர்வு உண்டு. கணினி துறையினர்களுக்கு அயல்நாட்டில் வாய்ப்பு கிடைக்கும். கலைத்துறையினர்களுக்கு பரிசு, பாராட்டு கிடைக்கும். வீண் வதந்திகள் விலகும்.
பரிகாரம் :
விழுப்புரம் அருகில் பம்பை எனும் சிற்றாரில் வடகரையில் உள்ள திருவாமாத்தூர் எனும் ஊரில் ஸ்ரீகாமதேனுவுக்கு அருள்பாலித்த அருள்மிகு அழகிய நாச்சியம்மை உடனுறை ஸ்ரீகாமார்த்தேஸ்வரரை உத்திரட்டாதி நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். கால் இல்லாதவர்களுக்கு உதவுங்கள். மகிழ்ச்சி தங்கும்.