தகவல் தொழில் நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் - உற்பத்தி வரி குறைக்கப்படலாம்?

வியாழன், 28 பிப்ரவரி 2008 (15:48 IST)
தகவல் தொழில் நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு பட்ஜெட்டில் உற்பத்தி வரி குறைக்கப்படலாம் என தெரிகிறது,

தற்போது மானிட்டர், ஃபைபர் கேபிள், சாப்ட்வேர், ஹார்ட்வேர் ஆகியவைகளுக்கு உற்பத்தி வரி 16 விழுக்காடு விதிக்கப்படுகிறது. இது 12 விழுக்காடாக குறைக்க வேண்டும். எம்.பி 3, எம்.பி 4 பிளேயர் போன்றவைகளுக்கு இறக்குமதி வரி நீக்க வேண்டும் என்று தகவல் தொழில் நுட்ப அமைச்சகம், நிதி அமைச்சகத்திடம் கூறியுள்ளது.

இந்த ஆலோசனைகள் ஏற்று, இவைகளுக்கு வரி குறைப்பு இருக்கும் என்று தெரிகிறது. இதனால் கம்ப்யூட்டர் உட்பட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு வரி குறைக்கப்படலாம் என்று தெரிகிறது.

எம்.பி 3 பிளேயர், முழுமையாக இணைக்கப்பட்ட கம்ப்யூட்டர் போன்றவை அதிக அளவு இரண்டாம் நிலை சந்தையில் விற்பனையாகிறது. இவற்றின் மீதான வரி குறைக்கப்பட்டால், இவற்றின் விற்பனை முதல் நிலை சந்தையில் அதிகரிக்கும். இதனால் அரசுக்கு வருவாயும் அதிகரிக்கும்.

செல்போன் தயாரிக்க பயன்படும் பல்வேறு பாகங்களின் இறக்குமதி வரியை முழுமையாக நீக்கி விட்டு, முழுவதுமாக தயாரிக்கப்பட்ட செல்போன்களுக்கு, அதன் விலை அடிப்படையில் உற்பத்தி வரி விதிக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.

இதற்கான அறிவிப்பும் பட்ஜெட்டில் இருக்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்