‌தீபாவ‌ளி‌யி‌ல் எ‌ண்ணெ‌‌ய்‌க் கு‌ளிய‌ல்

வியாழன், 15 அக்டோபர் 2009 (13:46 IST)
தீபாவளியில் எண்ணை தேய்த்து குளிப்பதற்கும் காரணம் உள்ளதாக சாஸ்திரங்களில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது, எண்ணையில் லட்சுமியும், குளிப்பதற்கு பயன்படுத்தும் வென்னீரில் கங்கா தேவியும், உடலில் தேய்க்கப்படும் எண்ணையைப் போக்குவதற்காக பயன்படுத்தும் சீயக்காய்த் தூளில் வாயு பகவானும் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அவரவர் வசிக்கும் ஊர்களில் ஆறு, குளம் இருந்தாலும், தீபாவளி அன்று, எண்ணை தேய்த்து, சுடு தண்ணீரில் அதாவது வென்னீரில் குளிப்பதே சிறப்பாகும்.

webdunia photo
WD
வென்னீர் வைக்கும் பாத்திரத்தில், தீபாவளிக்கு முன் தினம் இரவில், வேப்பம் பட்டை, ஆலம் பட்டை, அரசம் பட்டை, அத்திப்பட்டை, கடுக்காய், சுக்கு ஆகியவற்றை ஊர வைத்து மறு நாள் அதிகாலையில் சூடு செய்து குளிக்கவேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதற்கு அவ்ஷத ஸ்நானம் என்று அழைக்கப்படுகிறது.

பொதுவாக ஐப்பசி மாதம் அமாவாசைக்கு முதல் நாள் சதுர்த்தசி இருக்கும் சமயத்தில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, சாந்த்ரமான ரீதியாக புரட்டாசி மாதத்தின் கடைசி நாளில் (அக்டோபர் மாதம் 17-ந் தேதி-சனிக்கிழமை) சதுர்த்தசி திதி வந்துவிடுகிறது.

எனவே, அன்றைய தினமே தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்