பட்ஜெட் எதிர்பார்ப்பு பற்றி ஆங்கிலத்தில் வாசகர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களின் தமிழ் வடிவத்தை ஆங்கிலம் தெரியாதவர்கள் அறிந்து கொள்வதற்காக கொடுத்துள்ளோம். - ஆசிரியர்.
g.velu 11-02-08 (12:54 PM) ABOUT THE 6TH PAY COMMISSION.
(இதன் தமிழ் வடிவம்) ஜி.வேலு ஆறாவது ஊதிய கமிஷன் பற்றி.
*** nambirajan 07-02-08 (02:56 PM) நம்பிராஜன்
இந்த பட்ஜட்தில் மத்திய அரசு ஊழியர்கலுக்கு ஊதியம் 50% உயரும் எண எதிர்பார்கிறோம் *** K BHUVANESWARI 06-02-08 (10:54 AM)
I expect that the budget must be designed to suit for the lowest or nominal income people.Also the minister ensure that most of the citizen benefited of their basic living things.Budget must focus on bring down or control prices of essential commodity. (இதன் தமிழ் வடிவம்) கே.புவனேஸ்வரி பட்ஜெட் கீழ் தட்டு அல்லது குறைந்த வருமானம் உள்ள மக்களுக்கு பயன் படும் வகையில் தயாரிக்கப்பட வேண்டும். பெரும்பான்மையான மக்களுக்கு அடிப்படை தேவைகள் கிடைக்க அமைச்சர் உறுதி செய்ய வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க அல்லது விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் பட்ஜெட் இருக்க வேண்டும்.
bhuvaneswari 04-02-08 (10:19 AM)
Tax- Every citizen of india must feel their responsibility to remit Tax. Even Politicians also paid the tax properly. The budget will be processed based on the middle class family & poor family because 75% of the people are in middle class & 15% of poor people. They are struggled for getting food even one time per day. At the same time policiticians are getting benefited by all the way in public money. If they realise their duties and paid their tax currectly govt. will get income and there is no deficit budget. When they realised the sufferings of public then only budget has been welcomed wholeheartedly by each & every individual
(இதன் தமிழ் வடிவம்) புவனேஸ்வரி
வரி- இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் வரி கட்டுவது அவர்களது பொறுப்பாக உணர வேண்டும். அரசியல்வாதிகளும் முறையாக வரி கட்ட வேண்டும். பட்ஜெட் நடுத்தர மக்கள் மற்றும் ஏழை மக்களை மனதில் கொண்டு தயாரிக்கப்பட வேண்டும். ஏனெனில் மக்கள் தொகையில் 70 விழுக்காடு பேர் நடுத்தர வருவாய் பிரிவினராகவும், 15 விழுக்காடு ஏழைகளாகவும் இருக்கின்றனர். அவர்கள் ஒரு வேளை உணவு கிடைக்க போராடுகின்றனர். அதே நேரத்தில் மக்களின் பணத்தால் அரசியல்வாதிகள் எல்லா விதத்திலும் பயன்பெறுகின்றனர். அவர்கள் தங்களது கடமையை உணர்ந்து, அரசுக்கு சரியாக வரி செலுத்தினால் அரசுக்கு வருவாய் கிடைக்கும். பட்ஜெட்டிலில் பற்றாக்குறையே இருக்காது. அவர்கள் எப்போது பொதுமக்களின் கஷ்டத்தை உணர்கின்றார்களோ அப்போதுதான், ஒவ்வொருவரும் மனதார பட்ஜெட்டை வரவேற்பார்கள்.
***
K BHUVANESWARI 06-02-08 (11:00 AM)
I agree with the points mentioned. Please insist such people directly/indirectly for the benefit of our economic growth.
(இதன் தமிழ் வடிவம்) கே.புவனேஸ்வரி
மேலே உள்ள செய்தியில் உள்ள கருத்தில் நான் உடன்படுகின்றேன். இந்த மாதிரியானவர்கள் நேரடியாக அல்லது மறைமுகமாக நமது பொருளாதார வளர்ச்சிக்கு உதவ வலியுறுத்த வேண்டும்.
*** chithra 04-02-08 (09:41 AM)
சித்ரா
அத்யாவசிய உணவு பொருளான அரிசி விலையை குறைக்க முயற்சி செய்யவும். *** sukumar 03-02-08 (02:38 PM)
Tax- Every citizen of india must feel their responsibility to remit Tax. For that the % of tax must be less to bring everyone into tax remittance pool. For eg. Income tax No exemption need be given income-TDS2% to 3% = balance for the family exp, savings, etc. Tax evasion occurs only because of higher % tax rate
(இதன் தமிழ் வடிவம்) சுகுமார் வரி- இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் வரி கட்ட வேண்டும் என்று உணர வேண்டும். அதற்கு ஏற்றார் போல் ஒவ்வொருவரும் வரி செலுத்துவதற்கு தகுந்தாற் போல் வரி குறைவாக இருக்க வேண்டும். உதாரணமாக வருமான வரிக்கு எவ்விl விலக்கும் இருக்க கூடாது.அதே நேரத்தில் வரி சம்பளத்தில் 2 முதல் 3 விழுக்காடே இருக்க வேண்டும். மீதம் குடும்ப செலவு, சேமிப்பிற்கு தேவை. அதிக அளவு வரி இருப்பதால்தான் வரி ஏய்ப்பும் இருக்கிறது.
***
Arun 02-02-08 (10:55 PM)
I am a farmer family we affecting more in agriculture(crops) we ask to some clear functionalities for small farmers - marketing agricultural things - government to take action to producing fertilizers like 171717,DAP and urea. this is stopped now govt. to take action on this budget these are all farmers expecting this budget then clear implementation to take action on marketing things produced by small farmers we are more in natural (e.g. rain or sunlight more or no water etc at last affected by people who selling agricultural things cropped by farmer. to take action on this means 60 % of people in our country be happy
(இதன் தமிழ் வடிவம்) அருண்.
நான் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். நாங்கள் விவசாயத்தால் அதிக அளவு பாதிக்கப்படுகின்றோம். நாங்கள் சிறு விவசாயிகளுக்காக தெளிவான நடவடிக்கையை எதிர்பார்க்கின்றோம். விவசாய விளை பொருட்களை சந்தைப்படுத்துதல், 171717, டி.ஏ.பி மற்றும் யூரியா போன்ற உரங்கள் தாயாரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறிய விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவு பொருட்களை விற்பனை செய்ய தேவையான நடவடிக்கை பட்ஜெட்டில் இருக்கும் என எதிர்பார்க்கின்றனர். நமக்கு இயற்கை வளம் உள்ளது. (உ.ம். மழை, சூரிய ஒளி அல்லது நீர் பற்றாக்குறை ) இதனால் இறுதியாக பாதிக்கப்படுவது விளைச்சலை விற்பனை செய்யும் விவசாயிகள் தான். மக்கள் தொகையில் 60 விழுக்காடாக உள்ள அவர்கள் பயன் பெறும் நடவடிக்கை எடுத்தால், அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
Arun 02-02-08 (10:53 PM)
Expect income tax payment minimum amount should increase to 3 Lakhs per annum. Middle class are affecting more for present amount i.e 1 lak 10,000 per annum - because we spend more amount to studies minimum 3 to 4 lakhs for higher studies.
(இதன் தமிழ் வடிவம்) அருண்
வருமான வரி உச்சவரம்பு 3 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். வருடத்திற்கு வரிமான வரி விலக்கு உச்சவரம்பாக ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் இருப்பதால் தற்போது நடுத்தர வருவாய் பிரிவினர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் உயர் கல்விக்கு குறைந்தது 3 முதல் 4 லட்சம் வரை செலவழிக்கின்றோம்.
***
PRIYA 02-02-08 (12:03 PM)
Budget should be designed to suit for the nominal income people. Essential items prices should come down. So that everyone will be benefited from the budget. Take proper decision to control the price first. Hope that P.C will take proper decision to control the price. Expecting FEB 29 for a correct budget.
(இதன் தமிழ் வடிவம்)
பிரியா பட்ஜெட் சாதாரண மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்க வேண்டும். எனவே ஒவ்வொருவரும் பட்ஜெட்டால் பயன்பெறுவார்கள். முதலில் விலைகளை குறைக்க தேலையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். ப.சிதம்பரம் விலைவாசியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பார் என்று நம்பலாம். சரியான பட்ஜெட்டை பிப்ரவரி 29 இல் எதிர்பார்க்கலாம்.
***
S.Senthil kumar-Sg 01-02-08 (10:48 AM)
I expect that the budget must be designed to suit for the lowest or nominal income people. Also the minister ensure that most of the citizen benefited of their basic living things. Budget must focus on bring down or control prices of essential commodity.
(இதன் தமிழ் வடிவம்)
எஸ்.செந்தில் குமார். பட்ஜெட் குறைந்த அல்லது சராசரி வருவாய் உள்ளவர்களுக்கு உதவக் கூடிய வகையில் இருக்க வேண்டும். பெருவாரியான மக்களுக்கு அத்தியாவசிய தேவை நிறைவடைவதை அமைச்சர் உறுதிப்படுத்த வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை கட்டுப்படுத்த அல்லது குறையும் வகையில் பட்ஜெட் இருக்க வேண்டும்.
***
T.V.Vasudevan 01-02-08 (10:21 AM)
I am working central government institute. We are eagerly waiting for VI Pay Commission. We want to know the hike of our pay scale between existing scale and revised scale. Is it released in April 2008. Is it any clarification in the budget. Please confirm. T.V.Vasudevan 01-02-08 (10:21 AM)
(இதன் தமிழ் வடிவம்) டி.வி.வாசுதேவன்.
நான் மத்திய அரசு இன்ஷ்டியூட்டில் வேலை பார்க்கின்றேன். நாங்கள் ஆறாவது சம்பள கமிஷன் அறிக்கையை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளோம். தற்போதுள்ள ஊதியத்தில் இருந்து, எவ்வளவு ஊதிய உயர்வு கிடைக்கும் என்பதை அறிய ஆவலாக இருக்கின்றோம். ஆறாவது சம்பள கமிஷன் அறிக்கை ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படுமா. பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு இருக்குமா என்பதை உறுதிபடுத்தவும்.
***
Kumaresan- Vellore 01-02-08 (09:36 AM)
தமிழகத்தில் தொழில் முதலீடு அதிகரிக்க முக்கியத்துவம் கொடுக்க வேணடும். வருமான வரி விதி விலக்கு 3 லட்சமாக உயர்த்த வேண்டும் விவசாயத்திற்க்கு அதிக முக்கியதுவம் கொடுக்க வேண்டும். ஸ்டீல் விலை உயர்வை கட்டுப்படுத்த அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
***
RA 01-02-08 (08:03 AM)
Income tax limit should increase to 2 laks.And until 5laks the tax should be 10% only. Today world 2laks per year is too little money. All items are hike several times in one year. 4 person family need average 15 k for one month expense. We are work hard for our family and nation. If govt. change the limit then we are happy to pay tax. It should block money go to black market.
(இதன் தமிழ் வடிவம்) ஆர்.ஏ
வருமான வரி வரம்பை ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும். ரூ.5 லட்சம் வரை 10% விழுக்காடு வரியே விதிக்கப்பட வேண்டும். இன்றைய நிலையில் ரூ.2 லட்சம் என்பது சிறு தொகைதான். வருடத்திற்கு பல முறை எல்லா பொருட்களின் விலையும் அதிகரிக்கிறது. நான்கு பேர் உள்ள குடும்பத்திற்கு மாதத்திற்கு ரூ.15 ஆயிரம் தேவைப்படுகிறது. நாங்கள் எங்கள் குடும்பத்திற்காகவும், நாட்டிற்காகவும் கடுமையாக உழைக்கின்றோம். மத்திய அரசு வருமான வரி வரம்பை உயத்தினால் மகிழ்ச்சியாக வரி செலுத்துவார்கள். இதனால் கருப்பு பணம் உருவாவது தடுக்கப்படும்.
***
Pushparaj 31-01-08 (09:11 PM)
1. Income tax should be common across the country / All states / Union Terotery... 2. All people should pay the tax including from small shops to big enterprise.
(இதன் தமிழ் வடிவம்)
புஷ்பராஜ் வருமான வரி வரம்பு எல்லா மாநிலம்/யூனியன் பிரதேசங்களில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். சிறு கடைக்காரர்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வைர எல்லோரும் வரி செலுத்த வேண்டும்.
***
Vijay 31-01-08 (05:48 PM)
The Income Tax limit should be extended to 1.5 L from the current 1.1L. (இதன் தமிழ் வடிவம்)
விஜய் தற்போது வருமான வரி வரம்பு ரூ.1.1 லட்சமாக இருப்பதை, ரூ.1.5 லட்சமாக உயர்த்த வேண்டும்.
***
sitaraman 31-01-08 (05:36 PM)
The budget should be very useful and helpful to the middle class family. It should be prepared and based on the poor men needy.
(இதன் தமிழ் வடிவம்)
சீதாராமன்.
பட்ஜெட் மத்திய தர வர்க்கத்தினருக்கு பயன் அளிக்க கூடியதாகவும், உதவிகரமானதாகவும் இருக்க வேண்டும். இது ஏழை மக்களை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட வேண்டும்.
***
Thanik 31-01-08 (04:38 PM) The Income TAX limit should be extended to Rs. 1.5 or even 2 lakhஇ. The savings limit under various sections also should be increased to 2 lakhs. Finance Minister definitely look in to that and do the needful
(இதன் தமிழ் வடிவம்)
தனிக்
வருமான வரி வரம்பை 1.5 லட்சம் அல்லது 2 லட்சமாக உயர்த்த வேண்டும். பல்வேறு சேமிப்புக்கு கொடுக்கும் வரி விலக்கையும் ரூ.2 லட்சம் வரை உயர்த்த வேண்டும். இதை மத்திய நிதி அமைச்சகம் கருத்தில் கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
***
Manikandan 31-01-08 (03:51 PM)
Should stop providing lot of free concessions and need to concentrate more on increasing employment. Tax limit should be increased so that middle class people gets benefited. Manikandan 31-01-08 (03:51 PM) (இதன் தமிழ் வடிவம்)
மணிகண்டன் பல இலவசங்களை கொடுப்பதை நிறுத்திவிட்டு, வேலை வாய்ப்பு அதிகப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வருமானவரி வரம்பை உயர்த்தினால் மத்தியதர வருவாய் பிரிவினருக்கு பயனுள்ளதாக இருக்கும்.
***
Nandakumar 31-01-08 (03:42 PM)
The Income TAX limit should be extended to Rs.2 Lacs. SO that lot of salaried class will benefit. Finance Minister definitely look in to that and do the needful.
(இதன் தமிழ் வடிவம்)
நந்தகுமார்
வருமானவரி வரம்பை 2 லட்சம் வரை உயர்த்த வேண்டும். இதனால் அதிக எண்ணிக்கையில் உள்ள மாத ஊதியம் பெறுபவர்கள் பயனடைவார்கள். இதை நிதி அமைச்சகம் கருத்தில் கொண்டு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
***
PARTHASARATHI 31-01-08 (02:55 PM)
அத்தியாவசிய பொருட்களாண சமையல் எண்ணை, பருப்பு வகைகள் விலை கட்டுபத்தப்பட முயற்சி செய்யவும்.
***
Selva 31-01-08 (12:53 PM)
The budget should be favourable to the poor people what ever the way. There shouldn't be any more poverty in India. Get the income from the one who is earning more money and use it for poor people.
(இதன் தமிழ் வடிவம்) செல்வா பட்ஜெட் எல்லா வழிகளிலும் ஏழை மக்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும். இந்தியாவில் வறுமையே இருக்க கூடாது. அதிக வருமானம் உள்ளவர்களிடம் இருந்து பெற்று, அதை ஏழை மக்களுக்கு பயன்படுத்த வேண்டும்.
***
Kumaresan 31-01-08 (11:54 AM)
அத்தியாவச பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்