உடல் நலக்குறைவால் பாலுறவு நாட்டம் குறைவு

வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (17:03 IST)
பெண்களுக்கு பொதுவாக 50 வயது எட்டும்போது, மாத விலக்கு நிற்கத் தொடங்கும். அதுபோன்ற இயற்கையாக மாதவிலக்கு நின்ற பெண்களோ அல்லது கட்டி போன்ற பல காரணங்களால் கர்ப்பப்பையை நீக்கிய பெண்களோ உடல் நலக்குறைவால் பாதிப்புக்குள்ளாகும் நிலையில், அவர்களின் பாலுறவுப் புணர்ச்சி நாட்டம் குறைவதாக அமெரிக்க ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், மூட்டு எலும்பு தேய்மான பிரச்சினை, ஆஸ்துமா போன்ற நோய்கள் இருப்பின் அவர்களுக்கு பாலுறவில் விருப்பம் இல்லாத நிலை ஏற்படும் என்றும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

இதற்காக 30 வயது முதல் 70 வயதுடைய சுமார் ஆயிரத்து 189 பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இவர்களில் இயற்கையாக மாதவிலக்கு நின்றவர்களில் 7 விழுக்காட்டினரும், ஆபரேஷன் செய்து கொண்டவர்களில் 12 விழுக்காட்டினரும் செக்ஸ் உறவில் நாட்டமின்றி இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிர அவர்கள் பெருமளவு மன அழுத்தத்திற்கு உள்ளாவதும் தெரிய வந்ததுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்