வீட்டில் குழந்தைச் செல்வம் தவழ..

செவ்வாய், 3 பிப்ரவரி 2009 (16:53 IST)
ுழந்தைப் பேறு கொடுக்க முடியாத ஆண்களில் பெரும்பாலானோருக்கு விந்துவில் உயிர் அணுக்கள் போதிய எண்ணிக்கையில் இல்லாததே காரணம் என்று தெரிய வந்துள்ளது.

உயிர் அணுக்கள் குறைவான எண்ணிக்கையில் இருந்தால், அவை ஊர்ந்து சென்று பெண்ணின் கருமுட்டையை அடைவதில் சிரமம் ஏற்படலாம். அவ்வாறு ஊர்ந்து சென்றாலும் மனைவியின் யோனியில் அழிக்கப்பட்டு விடக்கூடும்.

ஒரு சில ஆண்களின் உயிர் அணுக்களில் இயல்புக்கு மாறான குறைகள் காணப்படுவதும் உண்டு.

எது எப்படியிருப்பினும் தம்பதிகள் குழந்தை இல்லையே என கவலைப்பட வேண்டாம். நவீன மருத்துவ உலகில் குழந்தைப் பேறுக்கு எத்தனையோ வழிமுறைகள் கண்டறியப்பட்டு விட்டன.

கர்ப்பப்பை இல்லாத பெண்ணுக்குக் கூட கருத்தரித்தல் மூலம் குழந்தைப் பேறு கிடைக்கப்பெற்றுள்ளது. எனவே குறிப்பிட்ட சில ஆண்டுகள் வரை (ஓரிரு ஆண்டுகள்) தடுப்பு முறை எதுவும் மேற்கொள்ளாத சூழ்நிலையில், குழந்தை பிறக்கவில்லையா? உடனே அருகில் உள்ள உங்கள் குடும்ப மருத்துவரையோ அல்லது குழந்தைப் பேறு சிகிச்சைக்காகவே செயல்படும் மருத்துவர்களையோ அணுகுங்கள்.

படிப்படியான சிகிச்சையை அவர்கள் அளித்து விரைவில் உங்கள் வீட்டில் குழந்தைச் செல்வம் தவழச் செய்வார்கள்.

அதுபோன்றதொரு மருத்துவமனைதான் சென்னை வடபழனியில் 100 அடி சாலையில் அமைந்துள்ள ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையம்.

டாக்டர்கள் ப. காமராஜ், ஜெயராணி காமராஜ் ஆகியோர் பாலியல் ரீதியிலான பிரச்சினைகளையும், குழந்தைப் பேறு அடைவதற்கான சிகிச்சையையும் அளித்து வருகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்