பாலுறவுப் புணர்ச்சி என்பது கணவன்-மனைவி இடையேயான புனிதமான உறவு என்பதில் தொடங்கி பல்வேறு விஷயங்களை இப்பகுதியில் நாம் தெரிவித்துள்ளோம்.
இந்தக் கட்டுரையில் நாம் எடுத்துக் கொண்டிருப்பது, பாலுறவும்-குழந்தைப் பேறும் என்பது பற்றி.
சிலர் திருமணம் முடிந்த கையோடு, பத்தாவது மாதமே குழந்தை பெற்றுக் கொள்வார்கள். வேறு சிலர் வேலை, குடும்பம், பதவி உயர்வு, வசதி வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வதை சில ஆண்டுகள் வரை ஒத்திப்போடுவார்கள். அதற்காக அவர்கள் தடுப்பு முறைகளை கடைபிடிப்பார்கள்.
ஆனால், சிலருக்குத் திருமணம் முடிந்து தடுப்பு முறைகளைக் கடைபிடிக்காத நிலையிலும், பல ஆண்டுகள் வரை குழந்தைப் பேறு இல்லாத நிலையை அறிகிறோம்.
பொதுவாக நம்மூர் படங்களில் வருவது போன்று ஒருமுறை பாலுறவுப் புணர்ச்சி வைத்துக் கொண்டாலே குழந்தை பிறந்து விடும் என்பதெல்லாம் உண்மையல்ல.
குறைந்தது ஒரு ஆண்டு வரை கணவன்-மனைவி இருவரும் பாலுறவு கொண்டு, குழந்தைப் பேறு இல்லை என்றால் மட்டுமே, உரிய மருத்துவரை அணுக வேண்டும்.
முதலில் கணவனுக்கு விந்து பரிசோதனை நடத்திய பின், போதிய எண்ணிக்கையில் உயிரணுக்கள் உள்ளனவா, அவரை பெண்ணின் (மனைவி) கருமுட்டையை துளைக்கக்கூடிய ஆற்றல் கொண்டவையா? போன்றவற்றை அறிந்த பின்னரே மனைவிக்கு பரிசோதனைகளை டாக்டர்கள் தொடங்குவர்.
குழந்தைப் பேறு பெறுவதற்கான வழக்கமான சிகிச்சை முறை அது.
மாறாக, பாலுறவை சரிவர வைத்துக் கொள்ளாததால், குழந்தைப் பிறப்பு இல்லை என்று கூறுவது சரியல்ல.
பல ஆண்டுகள் வரை திருப்திகரமான இல்லறவாழ்க்கையை மேற்கொண்டு வருபவர்களுக்குக் கூட குழந்தை இல்லாத நிலை உண்டு. அதற்காக அவர்கள் பாலுறவுப் புணர்ச்சியில் திருப்திகரமாக இல்லை என அர்த்தமல்ல.
எனவே பாலுறவுக்கும், குழந்தை பெற்றுக் கொள்வதில் உள்ள குறைபாட்டிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.
குழந்தையின்மைக்கு என்ன காரணம் என்று திருமணமாகி ஒரு ஆண்டு முடிந்ததும், சிகிச்சையைத் தொடங்க வேண்டும்.
பாலுறவு வைத்துக் கொள்வதை மருத்துவர்களின் ஆலோசனைப்படி உரிய நாளில் வைத்துக் கொள்ளலாம்.