பிரிட்டனைச் சேர்ந்த 10 பெண்களில் 9 பேர் தாங்களாகவே பாலுறவு இன்பம் (சுய இன்பம்) அனுபவித்துக் கொள்வதற்கு நேரம் ஒதுக்கிக் கொள்வதாக தெரிய வந்துள்ளது.
பிரிட்டனில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு ஒன்று இத்தகவலை வெளியிட்டுள்ளது.
18 முதல் 30 வயதுடைய சுமார் ஆயிரம் பெண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களின் பாலுறவு செய்கைகள், பழக்க வழக்கங்கள், விருப்பம் உள்ளிட்டவை கேட்டறியப்பட்டது.
இதில், கடந்த 10 ஆண்டுகளில் அதிக அளவு பெண்கள் தாங்களாகவே இன்பம் அனுபவிப்பது தெரிய வந்துள்ளது.
பிரிட்டனில் மூன்றில் 2 பங்கு பெண்கள் வாரத்திற்கு 3 முறையும், லண்டனில் வாரத்திற்கு 4 முறையில் இதுபோன்ற செய்கைகளில் ஈடுபடுவதும் தெரிய வந்திருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது.
இப்படிச் செய்வதால் பெண்கள் தங்கள் துணையுடன் பாலுறவு கொள்ளும் போது தன்னம்பிக்கை ஏற்படுவதாக அவர்கள் கருதுவதாகவும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.