திருமணம் ஆன புதுமணத் தம்பதிகளிடையே நெருக்கம் அதிகம் இருப்பது இயல்பான ஒன்றுதான்.
வாரத்தின் அனைத்து நாட்களிலும் உறவு கொள்தல் மற்றும் ஒரே நாளில் ஒருமுறைக்கும் அதிகமாக தம்பதிகள் பாலுறவுப் புணர்ச்சி வைத்துக் கொள்தல் என்பதெல்லாம் புதுமணத் தம்பதிகளுக்கு ஒரு பொருட்டல்ல.
புதிய வாழ்க்கையை - புதுவிதமானதொரு அனுபவத்தை உணரும் அவர்கள், எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைப்பர். மாதங்கள் ஆக ஆக, ஓரிரு குழந்தைகள் பிறந்ததும் தம்பதியரிடையே பாலுறவு வைத்துக் கொள்தல் வாரத்திற்கு 2 அல்லது 3 முறையாகக் குறையக்கூடும். காரணம், குழந்தைகளைப் பராமரித்தல், அவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்து தருதல் என கணவன்-மனைவியின் கவனம் திசை திரும்பும்.
ஆனால், வேறு சில தம்பதியர் 55 வயதானாலும் தினமும் உறவு வைத்துக் கொள்வர். பல நேரங்களில் மனைவிக்கு விருப்பம் இல்லாத போதும், கணவனின் வற்புறுத்தல் காரணமாக வேறு வழியின்றி வாரத்திற்கு 4 அல்லது 5 முறையாவது உறவு வைத்துக் கொள்வர்.
செக்ஸ் உறவைப் பொருத்தவரை ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே நிறைய வேறுபாடு உண்டு.
பொதுவாக `மெனோபாஸ்' எனப்படும் மாதவிடாய் நின்று விட்டாலே பெண்களில் பெரும்பாலானோருக்கு பாலுறவில் சற்றே நாட்டம் குறைவது இயல்புதான். காரணம் பெண்களின் உடல்ரீதியான மாற்றம் என்று கூறலாம்.
ஆனால், ஆண்களைப் பொருத்தவரை 55 வயதிலும் பெரிய அளவில் சோர்வின்றி, முறுக்கேறிய உடம்புடனேயே இருப்பர். அதனால், வாரத்திற்கு குறைந்தது 2 முறையாவது உறவு கொள்ளலாம் என்று எண்ணுபவர்களாக இருப்பர்.
ஆண்களின் வயதுக்கேற்ப, பெண்களின் மனோநிலையும், உடல்நிலையும் ஒத்துழைத்தால் சரி. அப்படி இல்லாத நிலையில், பல நேரங்களில் கணவன் - மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகளும் ஏற்படலாம்.
வேறு சில நேரங்களில், மனைவி 50 வயதானாலும் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளும் நிலையில் இருப்பார். ஆனால், கணவன் உடல் நலக்குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் உறவைத் தொடர முடியாமல் இருப்பார்.
எனவே, உடலும் - உள்ளமும் ஒருங்கே இருபுறமும் (கணவன்-மனைவி) ஒத்துழைப்பு கொடுத்தால், வாரத்திற்கு 5 முறை வேண்டுமானாலும் பாலுறவுப் புணர்ச்சி வைத்துக் கொள்வதில் தவறில்லை.
இந்த நிலை நபருக்கு நபர் வேறுபடும் என்பதை மட்டும் மனதில் கொள்ள வேண்டும்.