கணவன் - மனைவி இடையேயான தாம்பத்யம் என்பது புனிதமான ஒரு உறவு என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.
பாலுறவுப் புணர்ச்சி கொள்ளாதவர்கள் வீட்டில் மகிழ்ச்சி இல்லை என்பார்கள். திருமணமானவுடன் புதுமணத் தம்பதிகள் ஆரம்பத்தில் அதிக நேரம் (முறை) பாலுறவுப் புணர்ச்சி கொள்வர். அதுவே ஓரிரு ஆண்டுகள் போய், ஒன்றோ, இரண்டோ குழந்தைகள் என்றானவுடன் பாலுறவில் நாட்டம் குறைவது இயற்கையே.
ஆனால், குறிப்பிட்டதொரு இடைவெளியில் பாலுறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும், இது நபருக்கு, நபர் வேறுபடும். தம்பதிகள் செய்யும் தொழில், பணி போன்றவற்றைப் பொருத்து, பாலுறவு கொள்ளும் இடைவெளி வேறுபடலாம்.
கணவன் - மனைவி இருவருமே வேலைக்குச் செல்பவராக இருந்தால், இருவருக்கும் பொதுவான விடுமுறை அல்லது வார விடுமுறை நாட்களில் உறவு கொள்ளலாம்.
திருமணமாகி 25-30 ஆண்டுகளாகியும் இணைபிரியாத தம்பதிகளைப் பற்றியும் கேள்விப்படுகிறோம். ஒரே ஆண்டில் ஒரு குழந்தை பிறந்தவுடனேயே அலுத்துப் போய் பாலுறவை தவிர்ப்பவர்களையும் பார்க்கிறோம். இதில் கணவனுக்கு அதிக நாட்டம் இருக்கும், மனைவி விருப்பமில்லாமல் இருப்பார். வேறு சில சம்பவங்களில் மனைவிக்கு நாட்டம் இருந்தும் கணவனுக்கு அதிக நாட்டமில்லாமல் போகும் வாய்ப்பும் உண்டு.
எனவே பாலுறவு என்பது மனித வாழ்க்கைக்கும், அமைதியான மனநலத்தை பேணுவதற்கும், புத்துணர்ச்சிக்கும் அவசியம் என்பதை அறிந்து உறவு கொள்தல் வேண்டும்.
எனவே, அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப, திருமணமாகி ஆண்டுகள் பலவாயினும் அவ்வப்போது பாலுறவுப் புணர்ச்சியை வைத்துக் கொள்தல் மனதிற்கும், உடலுக்கும் மகிழ்ச்சி தரும் என்பதில் ஐயமில்லை.