திட்டமிடப்பட்ட பாலுறவுப் புணர்ச்சி?

புதன், 24 செப்டம்பர் 2008 (18:25 IST)
திருமணம் முடிந்த கையோடு புதுமணத் தம்பதியர் தேன் நிலவிற்காக ஊட்டியோ, கொடைக்கானலோ அல்லது அவர்கள் வசிக்கும் பகுதிக்கேற்ப ஏதாவதொரு ஊருக்கோ அல்லது வெளிநாட்டிற்கோ செல்கிறார்கள்.

பெரும்பாலான தம்பதிகள் திருமணம் முடிந்த ஒரே ஆண்டில் குழந்தையைப் பெற்றுக் கொண்டு அவற்றை வளர்ப்பதிலேயே தங்களது முழு கவனத்தையும் செலுத்தி விட நேரிடுகிறது.

குழந்தை என்று பிறந்து விட்டாலே கணவன்-மனைவிக்கு இடையேயான பாலுறவுப் புணர்ச்சியில் இடைவெளி ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.

எனவே கணவன் - மனைவி இருவருமே ஒரு ஆண்டில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமா என்பதை முதலிலேயே திட்டமிடுதல் அவசியம்.

இயற்கையான பாலுறவுப் புணர்ச்சி மூலம் குழந்தை பெறுவதைத் தவிர்ப்பதிலும் சில பிரச்சினைகள் உள்ளன. தம்பதியரின் வயதும் முக்கியப் பங்காற்றுகிறது எனலாம்.

வயதாகி திருமணம் முடித்துக் கொள்ளும் தம்பதியரைப் பொருத்தவரை உடனடியாகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதே குழந்தைகளின் எதிர்காலத்திற்குச் சிறந்தது.

அதாவது கணவனுக்கு 35 வயதுக்கு மேற்பட்டும், மனைவிக்கு 30 வயதுக்கு மேற்பட்டும் இருப்பவர்கள் குழந்தை பிறப்பை கண்டிப்பாக ஒத்திப்போட முடியாது.

அதே நேரத்தில் சுமார் 25 வயதுகளில் இருக்கும் தம்பதியர் ஓரிரு ஆண்டுகள் குழந்தை பிறப்பை ஒத்தி வைக்கலாம். அதில் எந்தத் தவறும் இல்லை.

எனவே, தம்பதியரின் வயது, அவர்களின் சமூக-பொருளாதார நிலையைப் பொருத்து குழந்தை பெற்றுக் கொள்வதை தாமதப்படுத்தலாம். தடையற்ற, திட்டமிடப்பட்ட பாலுறவுப் புணர்ச்சியை தொடரலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்