ஓரினச் சேர்க்கையால் தற்கொலை எண்ணம்?

செவ்வாய், 16 செப்டம்பர் 2008 (18:10 IST)
ஓரினச் ேர்க்கை கொள்வோர் மற்றும் இரு பாலினத்தவர்களுடன் உறவு கொள்பவர்களுக்கு பல்வேறு விதமான மனநலக் குறைபாடுகளும், தற்கொலை எண்ணமும் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு ஆண், பெண்ணுடனோ அல்லது ஒரு பெண், ஆணுடனோ உறவு கொள்வதையே இயல்பான பாலுறவு (எதிர்பாலினத்தவருடன்) என்கிறோம்.

அதுபோன்ற இயல்பான பாலுறவு கொள்பவர்களுடன் ஒப்பிடுகையில், ஓரினச் சேர்க்கை மற்றும் இருபாலுறவு கொள்பவர்களுக்கு அதிக அளவில் மனநோய் ஏற்படுவது தெரிய வந்துள்ளது.

ஓரினச் சேர்க்கையாளர்கள் தங்களது வாழ்நாளில் குறைந்தபட்சம் மூன்று முறையேனும், தற்கொலைக்கு முயற்சிப்பதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. என்றாலும், இயல்புக்கு மாறான ஓரினச் சேர்க்கைதான் அவர்களின் அந்த முடிவுக்குக் காரணமா என்பது தெளிவாக்கப்படவில்லை.

ஓரினச் சேர்க்கையால் உருவாகும் நீண்டகால மன அழுத்தமே முக்கியக் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிக சுதந்திரம் உள்ள நாடுகளில் கூட ஓரினச் சேர்க்கை மற்றும் இருபாலுறவில் ஈடுபடுவோருக்குக் கடுமையான எதிர்ப்பு கிளம்புவதால், அவர்களுக்கு மனநல குறைபாடுகளும், தற்கொலை எண்ணமும் தலைதூக்குவதாக உளவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்