மெய்க்காப்பாளருடன் பிரிட்னி ஸ்பியர்ஸ் - புதிய சர்ச்சை

வெள்ளி, 1 ஆகஸ்ட் 2008 (14:29 IST)
பல ஆண்களுடன் இணைத்துப் பேசப்படுவதில் பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ்-க்கு இணை அவரே எனலாம்.

அண்மையில் பிரிட்னியும், அவருக்கு மெய்க்காப்பாளராக இருந்தவரும் ஒரு இரவு முழுவதும் தங்கியிருந்ததாக `தி சன்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

26 வயதான பிரிட்னி ஸ்பியர்ஸ், இஸ்ரேல் நாட்டு ராணுவ வீரரான டாம் லீ-யுடன் மெக்சிகோவில் டேட்டிங் (dating) சென்றார் என்பதே இப்போதைய புதிய தகவல்.

இஸ்ரேல் ராணுவத்தில் டாம் லீ பணியில் இருந்த போது நல்ல கட்டுமஸ்தான உடல்வாகைக் கொண்டிருந்ததாக தெரிகிறது. பொதுவாகவே நல்ல உடல்வாகைக் கொண்ட ஆண்களை பிரிட்னி விரும்புவதுடன், அவர்களுடன் டேட்டிங் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அந்த வகையில் டாம் லீயும், பிரிட்னி ஸ்பியர்சும் ஒன்றாக நேரத்தை செலவிட்டு வந்ததும், அவர்கள் உடலளவில் உறவைப் பகிர்ந்து கொண்டதும் தெரிய வந்திருப்பதாக அந்த செய்தி தெரிவித்துள்ளது.

மெய்க்காப்பாளர்கள் வரிசையில் பிரிட்னி ஸ்பியர்சிடம் சிக்கியவர்களில் 4வது நபர் லீ என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரிட்னி தனது முன்னாள் மேலாளர் சாம் லுட்டியுடன் இணைந்து சர்ச்சைக்குள்ளானார். தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

இதுஒருபுறம் என்றாலும், பாப் இசையை செவ்வனே செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்