மழைக்காலம் என்றாலே தண்ணீர் மூலமாகப் பரவும் நோய்கள் ஆபத்து இருப்பதை மறுப்பதற்கில்லை.
அதிலும், அண்மைக்காலமாக கொட்டித் தீர்த்த மழையால், பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதுடன், குடிநீரிலும் அசுத்த நீர் சேர்ந்து விடுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
குடிநீரில் பரவும் கிருமிகளால், அவற்றைக் குடிப்போருக்கு நோய்கள் ஏற்பதும் ஆபத்து உள்ளதால், நன்றாக காய்ச்சி ஆற வைத்த தண்ணீரைக் குடிப்பதே உடல் நலத்திற்கு உகந்தது.
அலுவலகம் செல்லும் போது காய்ச்சிய குடிநீரை கைப்பையில் கொண்டு செல்வது சாலச் சிறந்தது. ஹோட்டல், அலுவலகம் உள்பட எங்காவது தண்ணீர் குடித்து, தொண்டையில் பிரச்னை ஆரம்பிக்கிறதா?
காய்ச்சி ஆற வைத்த நீரில் சிறிதளவு சாதாரண உப்பை போட்டு காலை எழுந்தது முதல் மூன்று வேளை தொண்டையில் படும்படி அண்ணாந்து கொப்பளியுங்கள். நுண்கிருமிகள் மடிந்து தொண்டை பிரச்னை தீர்ந்து விடும்.