சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவரான டாக்டர் மோகன் ராஜனுக்கு ஆசியா பசிபிக் கண் நோய் இயல் அகாடமியின் இந்த ஆண்டின் (2008) மிகச்சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
ராஜன் மருத்துவமனையின் தலைவர் மற்றும் இயக்குனரான டாக்டர் மோகன் ராஜன், கண் அறுவை சிகிச்சை மற்றும் அது தொடர்பான படிப்புகளுக்கு ஆற்றிய சேவைக்காக இந்த விருது அளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
மொத்தம் 5 டாக்டர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாகவும், மற்ற டாக்டர்கள் அனைவரும் ஹாங்காங், சிங்கப்பூர், தாய்லாந்து, ஜப்பான் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங்கில் சமீபத்தில் நடைபெற்ற உலக கண் நோய் இயல் குறித்த மாநாட்டில் இந்த விருது அவர்களுக்கு வழங்கப்பட்டது.