உடல் இளைக்கும் விளம்பரங்களுக்கு ஜெயில் தண்டனை

வியாழன், 10 ஏப்ரல் 2008 (16:42 IST)
உங்கள் உடலை கச்சிதமாக்க... தேவையற்ற சதைகளைக் குறைக்க என்று விளம்பரம் தந்தாலே போதும் அவர்களை காவல்துறை விரைந்து வந்து கைது செய்யும்.

இந்த செய்தி எங்கு தெரியுமா? பிரான்ஸ் நாட்டில் தான்.

webdunia photoWD
அந்நாட்டில்தான், பத்திரிக்கைகள், இணையதளங்கள் மற்றும் இதர ஊடகங்கள் மூலம், "தேவையற்ற தசைகளைக் குறைக்க" என்று விளம்பரம் தருவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

இந்த அதிரடி நடவடிக்கைக்கு காரணம், பிரான்ஸ் நாட்டில் 40,000க்கும் மேற்பட்ட பெண்கள் பசியின்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதுதான்.

பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்பட உள்ள இந்த சட்ட மசோதாவில், ஒஒருவரை உடலை இளைக்க தூண்டி, அதன் மூலம் அவருக்கு பசியின்மை வியாதி ஏற்பட்டு இறப்பு நேர்ந்தால், தூண்டியவருக்கு 3 வருட சிறை தண்டனையும், 36,000 பவுண்ட் அபராதமும் விதிக்கப்படும்.

மேலும், உடலை இளைக்கத் தூண்டினால் மட்டுமே 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.