வாழை‌ப்பழ‌ம் சா‌ப்‌பி‌ட்டா‌ல்

சனி, 5 ஜூன் 2010 (13:08 IST)
வாழைப்பழத்தில் ஏராளமான ஊட்டச் சத்துக்கள் நிறைந்து இரு‌க்‌கி‌ன்றன. ம‌ற்ற பழ‌ங்களை ‌விட பல ந‌ல்ல குண‌ங்களையு‌ம் வாழை‌ப் பழ‌ம் பெ‌ற்று‌ள்ளது.

அதும‌‌ட்டு‌ம் அ‌ல்லாம‌ல் பல நோய்களை வராமல் தடுக்கக் கூடிய ஆற்றலையும் வாழைப்பழம் பெற்றுள்ளது. ஒவ்வொருவரும் தினமும் ஒரு வாழைப்பழமாவது சாப்பிடுவது மிகவும் நல்லது.

அதனால்தான் பழங்காலத்தில் எந்த விசேஷமாக இருந்தாலும் வெற்றிலையுடன் வாழைப்பழத்தையும் இணைத்து கொடுத்தனர்.

மலச்சிக்கல், குடல் பிரச்சினை, மனத் தளர்ச்சி ஆகியவற்றை நீக்கும் தன்மை உடையது வாழை‌ப்பழ‌ம். வாழைப்பழத்துடன் பால் சேர்த்து மில்க்ஷேக் சாப்பிட்டால் உடல் சோம்பல் ஓடிவிடும்.

புகைப்பழக்கத்தை விடமுடியாமல் தவிப்பவர்கள், வாழைப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் புகைக்கும் எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்