தூதுவளை‌யி‌ன் மக‌த்துவ‌ம்

புதன், 26 மே 2010 (12:52 IST)
தூதுவளை எ‌ன்பது கொடி இனமாகு‌ம். இலை முழு‌க்க ‌சி‌றிய மு‌ட்களை‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம். இ‌ந்த‌க் கொடி‌யி‌ல் பூ‌க்கு‌ம் பூ மித ஊதா நிற‌த்‌தி‌ல் இரு‌க்கு‌ம். பழ‌ம் ‌சிவ‌ப்பு ‌நிற‌த்‌தி‌ல் இரு‌க்கு‌ம்.

தூதுவளை‌க் கொடியை பந்தல் போட்டு‌ம், வ‌ே‌லி‌யி‌ல் படர‌வி‌ட்டு‌ம் வள‌ர்‌க்கலா‌ம். கொடி‌யி‌ல் இரு‌க்கு‌ம் மு‌ட்க‌ளி‌ன் காரணமாக எ‌ந்த கா‌ல்நடைகளு‌ம் இதனை சா‌ப்‌பிடாது. எனவே பாதுகா‌‌க்க வே‌ண்டிய அவ‌சியமே இ‌ல்லை.

தூதுவளை‌க் கொடி‌யி‌ன் வேர் முதல் பழம் வரை எல்லாமே மருத்துவக் குணம் கொண்டவை.

இதன் இலையும், பூவும் கோழையை அகற்றவும், உடலைப் பலப்படுத்தவும், காமத்தைப் பெருக்கவும் செய்யும். இதன் காய், பழம் பசியைத் தூண்டும், மலச்சிக்கலைப் போக்கவும் பயன்படும்.

த‌மிழக‌த்‌தி‌ல் இ‌ந்த கொடி‌யின‌ம் ப‌ல்வேறு இட‌ங்க‌ளி‌ல் சாதாரணமாகவே வள‌ரு‌ம் த‌ன்மை கொ‌ண்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்