வெள்ளி, 27 நவம்பர் 2009 (13:17 IST)
கடுகை தூள் செய்து வெந்நீரில் ஊற வைத்து வடித்து கொடுக்க விக்கலை குணமாக்கும்.
கடுகை அரைத்து பற்றிட ரத்தக்கட்டு, மூட்டு வலி தணியும்.
கை, கால்கள் சில்லிட்டு விரைத்துக் காணப்பட்டால் கடுகை அரைத்து துணியில் தடவி கை, கால்களில் சுற்றி வைக்க வெப்பத்தை உண்டாக்கும். உடனடியாக விரைப்பு சீராகும்.
கடுகு, பூண்டு, வசம்பு, கருவாப்பட்டை, கழற்சிக்காய், கடுகு, ரோகிணி ஆகியவற்றை சம அளவு எடுத்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி இருவேளை வீதம் ஒரு வாரம் குடித்து வர வாதம், வாய்வு, குத்தல் பிரச்சினை குணமாகும்.
கடுகு, மஞ்சள் சம அளவு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டிக் காதில் சில சொட்டுகள் இட தலைவலிக்கு நிவாரணம் கிட்டும்.