சாதம் எப்படி இருக்க வேண்டும்

திங்கள், 20 ஜூலை 2009 (16:45 IST)
புழுங்கலரிசி சாதம் அனைவருக்கும் ஏற்றது. புழுங்கலரிசி சாதத்தை சாப்பிடுபவர்களை வாத நோய் தாக்காது.

குழைந்த சாதத்தையே சாப்பிட்டு வந்தால் பசி குறைவு ஏற்படும். இடுப்பு வலியுடன் கூடிய வெள்ளப்போக்கு, இருமல் உண்டாகும்.

தினமும் அதிக சூடான சாதத்தைச் சாப்பிட்டால், ரத்த கொதிப்பு, அடங்காத தாகம், நாவறட்சி உண்டாகும்.

தினமும் ஆறிப்போன சாதத்தை உண்டு வந்தால், கீல்வாதம் எனப்படும் மூட்டுவலி ஏற்படும்.

மிதமான சூடுள்ள சாதத்தை உண்பதே சிறந்தது. அதனால் வாத, பித்த, கப நோய்களையும், சைனஸ் நோயையும் போக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்