ரத்த சோகை நோயினால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். சரியான உணவு இல்லாமை, ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றாலும் ரத்தசோகை ஏற்படுகிறது.
ரத்த சோகை என்றதும் ஆப்பிளும், மாதுளம் பழமும் சாப்பிட வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறார்கள்.
ஆனால் ரத்த சோகைக்கு நிரந்தரத் தீர்வு காண உதவுவது திராட்சையாகும்.
ஊட்டச்சத்து மிக்க பழங்களில் திராட்சையும் ஒன்று. இதில் வைட்டமின் பி1, பி2, பி3, பி6, பி12, சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் சத்து ஆகியவை உள்ளன.
ரத்த சோகையைப் போக்கும் தன்மை திராட்சைக்கு உண்டு.
ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து திராட்சைப் பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் புது ரத்தம் உருவாகும். ரத்தம் தூய்மையடையும்.
பெண்களுக்கு ஏற்படும்ட மாதவிடாய் கோளாறுகளை நிவர்த்தி செய்யும். திராட்சை பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் எடையும் கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே மெலிந்த தேகம் கொண்டவர்கள் திராட்சை சாப்பிடலாம்.